கடையநல்லூர், மார்ச் 19: கடையநல்லூர் அடுத்த அகரக்கட்டு அனந்தபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி மின்னொளி கபடிப் போட்டி நடந்தது. அகரக்கட்டு அனந்தபுரத்தில் ஏ.பி.எம் பிரதர்ஸ் சார்பில் மின்னொளியில் நடந்த இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 26 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் வென்ற அணிக்கு திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை வழங்கினார்.
நிகழ்வில் ஆய்க்குடி பேரூர் செயலாளர் சிதம்பரம், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், திரிகூடபுரம் பஞ். துணைத்தலைவர் செய்யது மீரான், ஒன்றிய இளைஞரணி, வள்ளியம்மாள்புரம் முத்துக்குமார், கடையநல்லூர் நகர்மன்ற கவுன்சிலர் சிட்டி திவான் மைதீன், நயினாரகரம் பெருமாள் கோயில் அறங்காவலர் குமார், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் முருகன், பால அருணாசலபுரம் கிளைச் செயலாளர் கருப்பசாமி, நல்லையா, அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அகரக்கட்டு அனந்தபுரத்தில் மின்னொளி கபடி போட்டி appeared first on Dinakaran.
