போக்குவரத்து தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின், பழைய பேருந்து கட்டண அளவிலேயே பஸ்களை இயக்குவதற்கு உத்தரவிட்டு, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இருப்பதை உறுப்பினர் அறிவார்.
நம்முடைய போக்குவரத்து கழகங்களில் போதிய நிதி இல்லாத காரணத்தால் புதிய பணிமனை அமைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. சிரமமாக இருக்கின்றது. கடந்த ஆண்டு இதேபோன்று பணிமனை அமைக்க வேண்டும் என்று ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார். அவர் சொந்த ஏற்பாட்டில் செய்தால் அதை தருவோம் என்று உத்தரவாரம் அளித்தேன்.
அவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எம்எல்ஏக்கள் உதயசூரியன், தமிழரசி போன்றவர்கள் அவர்களே அமைத்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்கள். எனவே, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலேயே அவற்றை அமைத்து கொடுப்பதற்கு தாங்கள் முன்வந்தால் அவற்றை கூடிய விரைவில் செய்து தருவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
The post திருப்போரூர் தொகுதி பையூர் பகுதியில் போக்குவரத்து பணிமனை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: சட்டசபையில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.