நெம்மேலி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூர் ஆதிதிராவிடர் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி குடியிருப்பையொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் அந்த நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இங்கு, ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியில் அரசு நர்சரியும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், மீதமுள்ள, 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், ஆட்சிக்குக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படும் நோக்கில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நெம்மேலி ஊராட்சி பேரூர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகல் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர். அதில், அரசு நர்சரி அமைந்துள்ள இடத்தை தவிர்த்து ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் வகையிலும், குழந்தைகள் விளையாடவும் மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும், என்று மனு அளித்தனர்.

The post நெம்மேலி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: