சிவகங்கை, மார்ச் 18: காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி சுவாதி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அறியாகுறிச்சியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் சுவாதி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றம் மற்றும் இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 8ம் திருநாள் இரவு தங்கக்குதிரை வாகனத்தில் அம்மன் காட்சி தந்தார். 9ம் திருநாளான நேற்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 10ம் திருநாளான இன்று இரவு பூப்பல்லக்கு நடைபெற உள்ளது. தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தல், மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
The post காளியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.
