சேந்தமங்கலம், மார்ச் 18: புதுச்சத்திரம் அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (27), தறி தொழிலாளி. இவரது நண்பர் பிரபு, இருவரும் குருசாமிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம், மது அருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது, ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நேரு (25), அவரது நண்பர் வேலு (29) ஆகியோர், மது அருந்திவிட்டு அங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது பிரபுவிடம் இருவரும் தகராறு செய்தனர்.
அதனை மோகன்ராஜ் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த நேரு, வேலு சேர்ந்து, மோகன்ராஜை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, நேரு, வேலு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தறித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.