தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு திருப்பதியில் தரிசன அனுமதி: வரும் 24 முதல் அமல்

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி, தெலங்கானா மாநில மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வைக்கும் திட்டம் வரும் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே விஐபி தரிசனம் தொடர்பான தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து வரும் பரிந்துரை கடிதங்களுக்கு, வி.ஐ.பி தரிசனம் திங்கள், செவ்வாய் கிழமைகளுக்கு ஞாயிறு, திங்களில் சிபாரிசு கடிதம் பெற்று கொள்ளப்படும்.

அதேபோன்று ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டிற்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தந்த நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். (ஒரு நபருக்கு ஒரு பரிந்துரை கடிதம் மூலம் 6 பேருக்கு மிகாமல் ஏற்றுக்கொள்ளப்படும்) திங்கட்கிழமை விஐபி பிரேக் தரிசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் பெறப்பட்டு வந்த ஆந்திரப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பரிந்துரை கடிதங்கள், இனி சனிக்கிழமை கடிதம் பெறப்பட்டு (ஞாயிற்றுக்கிழமை தரிசனத்திற்காக) அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு திருப்பதியில் தரிசன அனுமதி: வரும் 24 முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: