அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கோரி 2018-ல் அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமைச்சர் சிவசங்கர் மீது 2018-ல் அரியலூர் போலீசார் 2 வழக்குகள் பதிவுசெய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர் சிவசங்கரன் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவு அளித்துள்ளார்.

The post அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: