யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் : திமுக எம்.பி.கனிமொழி

டெல்லி : யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தியும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். இது குறித்து மக்களவை செயலகத்திற்கு நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தற்போது யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளதாகவும், இதனை மாற்றி 8வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வழங்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கேள்வி தாள்கள் உள்ளதால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமாகவும் இந்தி பேசாத மாநிலங்களுக்கு பாதகமாகவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொகுதி சீரமைப்பு விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, திமுக சார்பில் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

The post யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் : திமுக எம்.பி.கனிமொழி appeared first on Dinakaran.

Related Stories: