மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டி இந்தியா சாம்பியன்: வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்

ராய்ப்பூர்: சர்வதேச மாஸ்டர் லீக் டி20 இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் முதலாவது டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஓய்வு பெற்ற முன்னணி வீரர்கள் பங்கேற்ற 6 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன. லீக் சுற்றுகளின் முடிவில் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல், இலங்கை அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும், பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ராய்ப்பூரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பிரையன் லாரா 6 ரன்னில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டுவைன் ஸ்மித் சிறப்பாக ஆடி 45 ரன் குவித்து ஆட்டமிழந்தார். லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன் குவித்து அவுட்டானார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 இழப்புக்கு 148 ரன் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

The post மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டி இந்தியா சாம்பியன்: வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண் appeared first on Dinakaran.

Related Stories: