“தமிழ் மகள்” நிகழ்ச்சியில் பங்கேற்கும் கல்லூரி மாணவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் குறிப்பாக செல்லம்மாள் மகளிர் கல்லூரி “வையத் தலைமைகொள்”, பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “கனவு மெய்ப்பட”, ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி “வல்லினம்… பெண்ணினம்”, லயோலா கல்லூரி “வல்லமை தாராயோ”, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “சிறகைவிரி எழு பற”, டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி “போர்த்தொழில் பழகு”, எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “உலகை மாற்றியப் பெண்கள்”, ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரி “இலக்கே விளக்கு”, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி “புதியதோர் உலகு”, நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி “கடிகாரம் ஓடும்முன் ஓடு”, எத்திராஜ் மகளிர் கல்லூரி “வானமே எல்லை”, காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி “செயலே அழகு”, ராணி மேரி மகளிர் கல்லூரி “பெரிதினும் பெரிதுகேள்”, செயிண்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “புதிய களம்” மற்றும் அண்ணா ஆதர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “மண் பயனுற வேண்டும்” ஆகிய கல்லூரிகளால் வழங்கப்பட்ட தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றுபவரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவிகள் அந்தந்த கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் ஏன், எதற்கு, எதனால் என்ற கேள்வி கணைகளோடு எழுப்பி சிறந்ததோர் சொற்போர் நடைபெறுகிறது. இச்சொற்போரில் நடுவர்களாக முன்னாள் நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, எஸ்.ஆனந்தி, இஸ்ரோ விஞ்ஞானி கே.தேன்மொழி செல்வி ஆகியோரும், இத்தமிழ் மகள் சொற்போரில் பங்கேற்று சிறப்பித்த மாணவிகளை முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.விமலா, சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர், Femi9 நிறுவனர் டாக்டர் கோமதி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றுகின்றனர். தமிழ் மகள் சொற்போரில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.75,000, மூன்றாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. மேலும் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இந்த விழாவில் நகரமைப்பு குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஸ்ரீதர் வரவேற்புரையில், 6வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் முன்னிலையில், மாமன்ற உறுப்பினர்கள் சுதா தீனதயாளன், டாக்டர்.ஜி.சாந்தகுமாரி, சர்வஜெயா தாஸ், ஜி.வி.நாகவள்ளி, கே.சாரதா, டி.யோகபிரியா, எம்.தாவுத்பீ, பி.அமுதா, சி.தணி, லதா வாசு, எஸ்.தனலட்சுமி, ஆ.பிரியதர்ஷினி, மோ.பானுபிரியா, உஷா நாகராஜ், டாக்டர்.பு.பூர்ணிமா, கே.பொற்கொடி, எஸ்.உமா, பாத்திமா முசாபர், பி.சுமதி, எல்.ரமணி, ச.தமிழ்ச்செல்வி, ரத்னா லோகேஸ்வரன், ஹேமலதா கணபதி, கே.ராணி, ச.பாரதி, ஏ.கமலா செழியன், எலிசபெத் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏ இ.பரந்தாமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர்கள் வி.சுதாகர், சொ.வேலு, திமுக அயலக அணி துணைச் செயலாளர் பரிதி இளம் சுருதி, வட்டச் செயலாளர் வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். இந்த விழாவில் சுகாதார நிலைக்குழு உறுப்பினர் புனிதவதி எத்திராஜன் நன்றி கூறுகிறார்.
The post உலக மகளிர் தினத்தை ஒட்டி 15 கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் ‘தமிழ்மகள்’ தலைப்பில் சொற்போர்: மேயர் பிரியா ஏற்பாட்டில் நாளை நடக்கிறது; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.