மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47% மட்டுமே முடிவடைந்துள்ளதாக RTI கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் பதில்

மதுரை : மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் தான் நடைபெற்றுள்ளது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.2,021.51 கோடி எனவும், அதில் ரூ.471.02 கோடி மத்திய பட்ஜெட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலர் தர்ம் பீர் குமார் சிங் பதில் அளித்துள்ளார்.

Related Stories: