இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு காய்கறிகள், பழம் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தினமும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கஞ்சா, மதுபோதையில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களை தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் மர்ம நபர்களை விரட்டியடித்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும்’ என்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் மதுக்கூடமாக மாறிய கழிவறைகள் appeared first on Dinakaran.