கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி, மார்ச் 15: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 11 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. அதிகாலை நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், நவகலச பூஜை நடந்தது. இதையடுத்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் ஷோடசா அபிஷேகமும், பின்னர் கலசாபிஷேகமும் நடந்தது. பூஜைகளை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரு முன்னின்று நடத்தினார்.நிகழ்ச்சியில் மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கோயில்கள் இணை ஆணையர் பழனிகுமார், கன்னியாகுமரி பேரூராட்சி தலைர் குமரி ஸ்டீபன், கோயில் மேலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின்னர் உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: