ரூ.2,423 கோடியில் முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம்: அடுத்த 3 ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் 5 நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 3 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேவைப்படும்போது ஒரு பகுதியின் உபரி நீரை பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை.

எனவே, முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னையில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திடும் இத்திட்டம் ரூ. 2,423 கோடியில் அடுத்த 3 ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
சென்னைப் மாநகராட்சியில் ரூ. 200 கோடி, கோவையில் ரூ. 120 கோடி, திருச்சி மாநகராட்சியில் ரூ. 100 கோடி மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் ரூ. 100 கோடி என நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் வாயிலாக, கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம் நகர்ப்புர உட்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

The post ரூ.2,423 கோடியில் முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம்: அடுத்த 3 ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் appeared first on Dinakaran.

Related Stories: