தெலுங்கிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் கௌரி பிரியா

சென்னை: மிஸ் ஹைதராபாத் 2018 வென்ற இளம் நடிகையான ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியான வெப் தொடரான ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ஷோபா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமாகியுள்ளார். இந்த வெப்தொடரில் ராஜு முருகன் இயக்கிய ‘லால்குண்டா பொம்மைகள்’ கதையில் மென்மையான இதயம் கொண்ட டாம்போயிஷ் பெண்ணாக அவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கௌரி பிரியா கூறியது: சென்னைப் பெண்ணின் பாத்திரத்தில் எனது சரியான தோற்றம், தன்னிச்சையான மற்றும் இயல்பான நடிப்பு போன்றவை ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கண்கள் வழியே வெளிப்படுத்தும் நடிப்பு, சாமர்த்தியம் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் என எல்லாம் பிடித்திருந்தது என வெப்சீரிஸ் பார்த்த பலரும் சொல்கிறார்கள். இதற்கு முன் தெலுங்கில் ‘ரைட்டர் பத்மபூஷன்’ என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த படத்துக்காகவும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிசுக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. கதைகள் கேட்டு வருகிறேன். அவசரப்படாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.

The post தெலுங்கிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் கௌரி பிரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: