அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். ஆசிரியர் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். கரசூர், சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இடம் தற்போது பிப்டிக் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐடி பூங்கா உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாயை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.500 கோடியும், 6 தொழிற்சாலைகளில் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். புதுச்சேரி மாநிலம் ஸ்பிரிச்சுவல் (ஆன்மீகம்) என்று எம்எல்ஏக்கள் சொன்னார்கள். ஆனால் ஸ்பிரிட்டில்தான் நமக்கு அதிக வருமானம் வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எல்லோருடைய கருத்தையும் கேட்கிறேன். மதுவிலக்கு கொண்டு வர முடியுமா? என்றால் முடியாது. பூரண மதுவிலக்கை கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன். எம்.எல்ஏக்கள் தயாரா? எனவே அது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் பேசினார். (அப்போது எந்த எம்எல்ஏவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
The post புதுச்சேரின்னா ஸ்பிரிச்சுவல் இல்ல… ஸ்பிரிட்… இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வழங்க 6 புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பேச்சு appeared first on Dinakaran.
