இம்பால்: மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட மூன்று பேர் பல்வேறு எம்எல்ஏக்களிடம் ரூ.4கோடி கொடுத்தால் மணிப்பூர் முதல்வர் பதவியை தருவதாக கூறி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இது தொடர்பாக இம்பால் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி உத்தரகாண்டை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரையும் நேற்று போலீசார் விசாரணைக்காக மணிப்பூர் அழைத்து வந்தனர்.
The post ரூ.4 கோடிக்கு மணிப்பூர் முதல்வர் பதவி அமித் ஷாவின் மகன் போல ஆள்மாறாட்டம் – 3 பேர் கைது appeared first on Dinakaran.