மண்டபம்,மார்ச் 13: மண்டபம் ரயில் நிலையம் பகுதியில் மயிலை அடித்து கொன்று எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ரயில்வே நிலையத்திற்கு 100 ஏக்கருக்கு மேல் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலங்கள் ரயில்வே நிலையம் அருகே மரம் செடிகளுடன் அமைந்துள்ளது. இரவு இந்த ரயில் நிலைய பகுதிகளில் வந்து மரங்கள்,செடிகளுக்குள் அடையும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மண்டபம் ரயில் நிலையம் அருகே மர்ம நபர்கள் மயிலை அடித்து கொன்று எரித்துள்ளனர். இதில் மயில் பாதி எரிந்தும் எரியாத நிலையிலும் கிடந்து உள்ளது.தகவல் பேரில் வந்த மண்டபம் வனச்சரக அதிகாரிகளை மயிலை எடுத்து சென்றனர். மயிலை உணவுக்காக அடித்துக் கொன்று எரித்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மயிலை கொன்று எரிப்பு appeared first on Dinakaran.
