ஈரோடு, மார்ச் 12: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோபி மதுவிலக்கு போலீசார், வடக்கு பேட்டை நால்ரோடு பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைவான இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், ரூ.3,640 மதிப்பிலான 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, விற்பனையில் ஈடுபட்ட குளத்துத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ் (67) என்பவரை கைது செய்தனர்.
The post சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.