ரயில் பாலத்தில் குளம்போல் தேங்கிய நீர்

பள்ளிபாளையம், மார்ச் 12: பள்ளிபாளையம் பகுதியில், நேற்று வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மாலையில் திடீரென மழை கொட்டியதால், சாலைகளில் வெள்ளம் ஓடியது. பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் வீட்டிற்கு அழைத்து வரச்சென்ற பெற்றோர் மழையில் நனைந்து அவதிப்பட்டனர். காவேரி ரயில் பாலத்தின் அடியில் நீர் வெளியேறும் கால்வாயில், கரும்பு சக்கைகள் அடைத்துக்கொண்டதால், மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. கனரக வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்ற நிலையில், டூவீலரில் ஓட்டி சென்றவர்கள் செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

மழை வெள்ளத்தில் பாலத்தின் அடியே மேடு பள்ளம் தெரியதாதால், இந்த வழியாக டூவீலரில் சென்ற பலர், புதுப்பாளையம் கிராமச்சாலை வழியாக, கோரக்காட்டு பள்ளம் சென்றன. இதனால் ஓடப்பள்ளி ஆயக்காட்டூர் செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றி வந்து மழையில் நனைந்து அவதிப்பட்டனர்.

The post ரயில் பாலத்தில் குளம்போல் தேங்கிய நீர் appeared first on Dinakaran.

Related Stories: