இந்த குற்றத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி, உடந்தையாக செயல்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் அம்பிகா வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைசெல்வி, மகேஸ்வரி ஆகிய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த ஸ்கேன் மையத்திலிருந்து கருவை கலைக்க தகவல் தரப்பட்ட 3 தனியார் மருத்துமனைகளை மூடப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள், தமிழ்நாடு அரசு இயக்குனருக்கு (மருத்துவ பணிகள்) அனுப்பினர். இந்த விவகாரத்தில் சிக்கிய தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணியை நிரந்த பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
The post சேலத்தில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவின் பாலினம் கூறிய செவிலியர் டிஸ்மிஸ்: சுகாதாரத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
