நெல்லை, மார்ச் 8: இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தி: தாயாக, மனைவியாக, மகளாக இந்த சமூகத்திற்கு பெண்கள் அளித்துவரும் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம். அதேபோல், பெண்களின் முன்னேற்றம்தான், ஒரு குடும்பத்தின் உயர்வு. இன்று ஆண்களுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிகிறார்கள், சாதனைகள் செய்கிறார்கள். பெண்களை கௌரவப்படுத்தும் ஒருநாளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான உரிமை மாநாட்டில், ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்ற கேள்வியை முதன்முதலாக முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக மார்ச் 8, உலக மகளிர் தினம் ஆனது. அனைத்து மகளிர்களுக்கும், என்னுடைய இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு ரூபி மனோகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
The post சமூகத்திற்கு பெண்களின் பங்கு அளப்பரியது appeared first on Dinakaran.
