ரூ.7 கோடி செக் மோசடி மாஜி கிரிக்கெட் வீரர் சேவாக் சகோதரர் கைது: 174 வழக்குகளில் ஜாமீன் கேட்டு மனு

சிம்லா: செக்மோசடி வழக்கில் மாஜி கிரிக்கெட் வீரர் சேவாக்கின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஜல்டா உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக், விஷ்ணு மிட்டல் மற்றும் சுதிர் மல்ஹோத்ரா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனம் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் தொழிற்சாலையின் உரிமையாளர் கிருஷ்ண மோகன் என்பவரிடம் இருந்து சில பொருட்களை கொள்முதல் செய்துள்ளது. அதற்காக ரூ.7 கோடிக்கான காசோலையை வழங்கியது. செக் பவுன்ஸ் ஆனதால் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சேவாக் சகோதரர் உள்பட மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 174 செக் மோசடி வழக்குகளில் ஜாமீன் கேட்டு வினோத் சேவாக் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

The post ரூ.7 கோடி செக் மோசடி மாஜி கிரிக்கெட் வீரர் சேவாக் சகோதரர் கைது: 174 வழக்குகளில் ஜாமீன் கேட்டு மனு appeared first on Dinakaran.

Related Stories: