மானாமதுரை, மார்ச் 6: மானாமதுரை கீழ்கரையில் கன்னார் தெரு செல்லும் வழியில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வாரச்சந்தைக்கு வருகின்றனர். வாரம்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் இச்சந்தைக்கு மானாமதுரை, நரிக்குடி, சிவகங்கை தாலுகாவிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கிராமத்தினர் வருகைக்கு ஏற்ப இச்சந்தையில் சராசரியாக 200 டன் காய்கறிகள், 10 டன் பழங்கள், மீன், கருவாடு என விற்பனை களைகட்டும். கடந்த சில மாதங்களாக இங்கு விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் எடைக்குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘‘வாரச்சந்தையி்ல் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் எடை குறைவாக இருக்கிறது.
தொழிலாளர் நலத்துறையினர் ஆண்டுதோறும் எடைக்கல்லுக்கு முத்திரை போடும் நிலையில் சந்தையில் விற்கப்படும் எடைக்கற்கள் பல ஆண்டுகள் பயன்படுத்தி தேய்ந்து போனதாக உள்ளது. இவற்றின் மூலம் எடை ேபாடப்படும் ெபாருட்கள் கிலோவுக்கு 200 கிராம் வரை குறைவாக உள்ளது. அதே போல எலக்ட்ரானிக் தராசுகளிலும் மோசடி நடக்கிறது. சிலர் எடை போடாமல் தனித்தனி கூறுகளாக விற்கின்றனர். இவ்வாறு கடந்த சில மாதங்களாக விலை குறைவாக விற்பனை செய்வதாக கூறி எடையில் மோசடி நடக்கிறது. தொழிலாளர் நலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
The post வாரச்சந்தையில் எடைக்குறைவாக காய்கறிகள் விற்பனையா? appeared first on Dinakaran.
