ஜெலன்ஸ்கியிடம் இருந்து முக்கியமான கடிதம் வந்துள்ளது. அதில் ஜெலன்ஸ்கி, போர் நிறுத்த அமைதி முயற்சிக்கான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைனின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற அமெரிக்கா வழங்கிய உதவிகளை மதிப்பதாகவும், உக்ரைனில் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திடுவதாகவும் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதே போல, ரஷ்யா தரப்பிலும் நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர நான் அயராது உழைக்கிறேன். கொடூரமான, மோசமான இப்போரால் அநாவசியமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், ரஷ்யர்கள் பலியாவதையும் காயமடைவதையும் நான் விரும்பவில்லை. இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும். அர்த்தமில்லாத இந்த போர் ஓய வேண்டும். அப்படி போரை நிறுத்த விரும்பினால், இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
இதற்கிடையே, உக்ரைனுக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை கண்டித்த பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பைரோவ், ‘‘அமெரிக்காவின் ராணுவ நிதி உதவி நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது உக்ரைனை கைவிடுவதற்கு சமம். மேலும், ரஷ்யாவை போரில் வெல்ல அனுமதிப்பதற்கு ஒப்பாகும். ரஷ்யா சண்டையை நிறுத்தினால் போர் ஓயும், அதுவே உக்ரைன் நிறுத்தினால், உக்ரைன் காணாமல் போய் விடும்’’ என்றார். அமெரிக்கா கைவிட்டாலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது.
The post போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயார்; அமெரிக்காவிடம் பணிந்தார் ஜெலன்ஸ்கி; அதிபர் டிரம்ப் தகவல் appeared first on Dinakaran.
