டெக்சாஸ் ஊட்டச்சத்து ஆலோசனை குழுவில் இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்

ஹூஸ்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் பத்மஜா படேல் டெக்சாஸ் ஊட்டச்சத்து ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பத்மஜா படேல், பரோடா மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்காவில் மருத்துவ பயிற்சிகளை முடித்தார. அதைத்தொடர்ந்து நட்ஜ் ஹெல்த் நிறுவனத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாகவும், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் லைஃப்ஸ்டைல் மெடிசின் தலைவராகவும், மிட்லான்ட் குவாலிட்டி அலையன்ஸ் மற்றும் ஹெல்த்தி சிட்டி மிட்லான்ட் ஆகியவற்றின் தலைமை பொறுப்பிலும் பணியாற்றுகிறார். இந்நிலையில் பத்மஜா படேல் டெக்சாஸ் ஊட்டச்சத்து ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு, உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்கிறது. மேலும் நாள்பட்ட நோய்களை தடுப்பதிலும், நிர்வகிப்பதிலும் உணவுகளின் பங்கை ஆராய்ச்சி செய்கிறது.

Related Stories: