பாரீஸ்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரான்சின் தேசிய அஞ்சல் சேவை மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. லா போஸ்ட்டி எனப்படும் பிரான்ஸ் தேசிய அஞ்சல் சேவை நிறுவனத்தின் கணினி அமைப்புகள் கடந்த திங்கட்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பார்சல் விநியோகம் முடங்கி உள்ளது. 3 நாட்களாகியும் நேற்று வரை இந்த முடக்கம் முழுமையாக சரி செய்யப்படாததால் அஞ்சலக வங்கி சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதலுக்கு ‘நோநேம்057’ எனும் ரஷ்ய ஹேக்கிங் குழு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக இந்த வழக்கை பிரான்ஸ் உளவுத்துறையான டிஜிஎஸ்ஐ எடுத்து விசாரித்து வருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்ய ஹேக்கர்கள் அடிக்கடி சைபர் தாக்குதல்கள் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
