ஒவ்வொரு படகிலிருந்தும் ரூ. 50,000 முதல் ரூ.52,000 வரை வருவாய் கிடைத்துள்ளது. மகாகும்பமேளாவிற்கு அரசு ரூ.7,500 கோடி முதலீடு செய்தது. இதன் மூலம் ரூ.3.50 லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது. ஓட்டல் துறையில் ரூ.40,000 கோடி, உணவு, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையில் ரூ.33,000 கோடி, போக்குவரத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி, மத வழிபாடு முறையில் ரூ.20,000 கோடி, நன்கொடை மூலம் ரூ.660 கோடி, சுங்கவரி மூலம் ரூ.300 கோடி, இதர வருவாய் ரூ.66,000 கோடி கிடைத்துள்ளது. மகாகும்பமேளாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் இந்த ஆண்டு இந்தியாவின் 6.5 சதவீத ஜிடிபி வளர்ச்சிக்கு பங்களிக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒரு நாள் வருவாய் மட்டும் ரூ.52 ஆயிரம் மகாகும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பம்: உபி முதல்வர் தகவல் appeared first on Dinakaran.
