மங்களூரில் உள்ள சசிஹித்லு கடற்கரையில் இந்தியாவின் 2வது சர்வதேச துடுப்புபடகு போட்டி நடைபெற உள்ளது. இம்மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி நடைபெற உள்ள இந்தப்போட்டியில் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் கிறிஸ்டியன் ஆண்டர்சன்(டென்மார்க்), முன்னாள் உலக சாம்பியன் டேனியல் ஹசல்யோ(ஹங்கேரி), இந்தியாவின் நெம்பர் ஒன் வீரர் சேகர் பச்சாய், மணிகண்டன்(தமிழ்நாடு) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கூடவே பெண்கள் பிரிவில் 4 முறை உலக சாம்பியனான நடப்பு சாம்பியன் எஸ்பெரன்சா பரோரஸ்(ஸ்பெயின்), சியாரா வோர்ஸ்டர்(தென் ஆப்ரிக்கா), லிம் சுஜியோங்(கொரியா) ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர்.
The post சர்வதேச துடுப்புபடகு போட்டி appeared first on Dinakaran.