திண்டுக்கல் சிறுமலை சம்பவத்துக்கு எடப்பாடி கண்டனம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. என்ஐஏ, ஏடிஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடிபொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஏற்கனவே ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க, இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திண்டுக்கல் சிறுமலை சம்பவத்துக்கு எடப்பாடி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: