தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

 

தஞ்சாவூர், மார்ச் 1: தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோயிலை மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் கட்டினார். தஞ்சாவூரில் அனுமனுக்கு வாயு மூலையில் அமைந்த ஒரே கோயிலாக திகழ்கிறது. மூலை அனுமாருடைய மணி கட்டிய வாலில் சனீஸ்வரன் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். பிரதி அமாவாசை தோறும் பக்தர்கள் 18 தீபமேற்றி 18 வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு, மாசி மாத அமாவாசையை முன்னிட்டு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது.

The post தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: