கரூர், பிப். 26: கரூர் காக்காவாடி பஞ்சாயத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் திருச்சிராப்பள்ளிபாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கரூர் ஜெய்ராம்ஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத் தன்னார்வ மாணவர்கள் வாயிலாக சிறப்பு முகாம் காக்காவாடி ஊராட்சியில் நடைபெற்றது.முகாமில் கோயில்கள் பராமரிப்பு, தெருச்சாலைகள் சுத்தம் செய்த மரம் நடுதல், சாலைகள் செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. முகாமில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தந்து விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர்.தொடக்க விழாவிற்குக் கல்லூரியின் தாளாளர் பொறியாளர் ராமசாமி தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ஸ்டீபன் ராஜா முன்னிலை வகித்தார்.காக்காவாடி பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் துரைராஜன், கல்வி இயக்குநர் லட்சுமணசிங் ஆகியோர் சிறப்புரையாற்றி முகாமை துவக்கி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வத் தொண்டர்கள் களப்பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இராமகிருஷ்ணன் செய்திருந்தார்.
The post கரூர் காக்காவாடியில் நாட்டு நல பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.
