அதிக எண்ணெய் உணவுகளால் உடல் பருமன் பாதிப்பு ஏற்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதை சுட்டிக் காட்டினார். எனவே 10 சதவீத எண்ணெயை குறைக்க முதலில் 10 பேர் சவாலை ஏற்க வேண்டுமெனவும் பின்னர் அவர்கள் 10 பேரும் தலா 10 பேருக்கு சவால் விடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அதன்படி, உடல்பருமனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மோகன்லால், தொழிலதிபர் மகேந்திரா, போஜ்புரி பாடகர்-நடிகர் நிராயு, துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனி, நடிகர் மாதவன், பாடகி ஸ்ரேயா கோஷல், எம்பி சுதா மூர்த்தி உட்பட 10 பேரை பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘இவர்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்துவார்கள்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
The post உடல் பருமனுக்கு எதிராக பிரசாரம் உமர் அப்துல்லா, மோகன்லால், மாதவன் பெயரை பரிந்துரைத்த பிரதமர் மோடி appeared first on Dinakaran.
