ராமேஸ்வரம் இளைஞர்கள் 4 பேர் குண்டாசில் கைது

ராமநாதபுரம், பிப். 21: ராமேஸ்வரம் தெற்கு கரையூரில் 4 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியது. இந்நிலையில் கடந்த ஜன.14ம் தேதி இரவு தெற்கு கரையூர் பூமாரியம்மன் கோயில் அருகே பேசிக் கொண்டிருந்த ஒரு பிரிவைச் சேர்ந்த மீனவர் நம்புக்குமார் (35), சேதுபதி, சத்ரியன், விஜி, சூர்ய பிரகாஷ் ஆகியோரை, மற்றொரு பிரிவைச் சேர்ந்த சொர்கேஸ்வரன், நம்புசரண், அயன்சரண்குமார், அஸ்வின் உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பல் ஆயுதம் உள்ளிட்டவற்றால் தாக்கியது. இதில் மீனவர் நம்புக்குமார் கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக துறைமுகம் போலீசார், தெற்கு கரையூரைச் சேர்ந்த சொர்கேஸ்வரன், நம்புசரண், அயன்சரண்குமார், அஸ்வின் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சொர்கேஸ்வரன்(20), அயன்சரண்குமார் (20), நம்புசரண் (19), அஸ்வின் (22) ஆகியோர், தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி சந்தீஷ் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேற்று அந்த 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து துறைமுகம் போலீசார், ராமநாதபுரம் சிறையிலிருந்த 4 பேரையும் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ராமேஸ்வரம் இளைஞர்கள் 4 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: