அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள நில ஆவணங்களை டிரோன் மூலம் அளந்து நவீன மயமாக்கும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் முதல் கட்டமாக மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் நில ஆவணங்களை அளக்கக்கூடிய ஆளில்லா டிரோன் இயந்திரத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.
மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம், துறைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் ஆறுமுகம் உள்பட நகர்மன்ற கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நிலங்கள் அளவீடு நவீன மாயமாக்கல் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களை கொண்ட நிலங்களும் டிரோன் இயந்திரம் மூலம் சரியாக துல்லியமாக அளவிடு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதல் முறையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் நகராட்சியில் இந்த திட்டம் முன்னோடி திட்டமாக இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டிரோன் கேமரா இயந்திரத்தின் மூலம் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வகையான நிலங்களும் துல்லியமாக அளவீடு செய்து ஒளிப்படம் எடுத்து கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்யப்படும். இதன் மூலம் வருவாய்த்துறை, நகராட்சி துறை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் துல்லியமாக கிடைக்கும் படிப்படியாக மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளில் இந்த டிரோன் கேமரா மூலம் நிலங்களை அளவிட செய்யப்படும்’ என்றனர்.
The post முதன் முறையாக மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் டிரோன் கேமரா மூலம் நில அளவிடும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
