பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக வெளியிட்ட கிராபிக்ஸ் பொய்யானது; பிரவீன் சக்கரவர்த்தியின் பின்னால் RSS பாஜக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழக கடன்சுமை அபாயகரமாக உள்ளதாக விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதில் தெரிவித்துள்ளார். அதில்,
பிரவீன் சக்கரவர்த்தி மீது குற்றச்சாட்டு
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பிரவீன் சக்கரவர்த்தி முயற்சி செய்து வருகிறார். பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி மீது கட்சி தலைமையிடம் புகார்
திமுக, காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பவர்களின் கனவு பலிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி ஆர்எஸ்எஸ், பாஜகவின் குரலாக பேசுகிறார். பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக வெளியிட்ட கிராபிக்ஸ் பொய்யானது. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளேன்.காட்டாட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தோடு எப்படி தமிழ்நாட்டை ஒப்பிட முடியும்?. காட்டாட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தோடு எப்படி தமிழ்நாட்டை ஒப்பிட முடியும்? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் பாரம்பரியம் தெரியாத பிரவீன் சக்கரவர்த்தி சுயவிளம்பரத்துக்காக இவ்வாறு பேசுகிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்; அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
