ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் ரஷ்யா சார்பாக பங்கேற்கின்றனர். அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது குறித்து ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,‘‘ அமெரிக்க- ரஷ்ய இடையிலான உறவுகளை மீட்டெடுப்பது, உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பது ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும்’’ என்றார்.
* உக்ரைனுக்கு அழைப்பு இல்லை
இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பற்றி பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி‘‘சவுதியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்குபெற உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிகாரிகள் இல்லாமல் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பலனளிக்காது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளையும் ஏற்கமாட்டோம்’’ என்றார். அதேநேரத்தில் சவுதி அரேபியாவுக்கு ஜெலன்ஸ்கி நாளை செல்ல உள்ளார். அவர், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா தலைவர்களை சந்திக்க மாட்டார் என்று உக்ரைன் அறிவித்துள்ளது.
The post உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.