திருக்கண்ணபுரத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனை முகாம்

 

நாகப்பட்டினம்,பிப்.17:தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம், கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் இணைந்து திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனை முகாம் நடந்தது.
கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் விஜயகுமார், பேராசிரியர் சுரேஷ், ஆவின் மேலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உற்பத்தியாளர்களிடம் பால் முழுவதையும் கொள்முதல் செய்வது, 10 நாட்களுக்கு ஒரு முறை பணம் கிடைக்க செய்வது, பாலின் தரத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த கொள்முதல் விலை வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கால்நடை உதவி மருத்துவர்கள் இளவரசி, பூபதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சிவராணி, சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், கிராம நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

The post திருக்கண்ணபுரத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: