மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி

 

வில்லிபுத்தூர், பிப்.16: வில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அத்திக்குளம் செங்குளம் கிராமத்தில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து ஆர்.என்.ஆர் 15048 ரக நெல் சாகுபடி செய்து, மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டிக்கு ரூ.150 கட்டணம் செலுத்தி வில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவப்பிரியா விண்ணப்பித்திருந்தார்.

இவரது வயலில் அறுவடை நாளில் நெல் மகசூலை கணித்திட நடுவர்களான விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, வேளாண்மை துணை இயக்குனர் நீர்மேலாண்மை பயிற்சி நிலையம் கமலா லட்சுமி மற்றும் விவசாய பிரதிநிதி பரமானந்தம் ஆகியோர் நேற்று முன்தினம் கண்காணித்தனர்.
இதில் ஸ்டாமின் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டார். மேலும் வில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி, வேளாண்மை அலுவலர் குருலக்ஷ்மி ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி கூறுகையில், ‘அறுவடை செய்யப்பட்ட மகசூல் விபரம் மாநில அளவில் இயக்குநர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்படும்’ என தெரிவித்தார்.

 

The post மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: