மதுரை, பிப். 15: மதுரை, செல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் அளித்த மனு: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் படி பொதுமக்கள் தபால் மூலமாக கேட்டுக்கொண்ட தகவல் தங்களது அலுவலகத்தில் இல்லாவிட்டாலும், எந்த அலுவலகத்தில் உள்ளதோ அந்த அலுவலருக்கு மனுவை அனுப்பி வைத்துவிட்டு, அதுகுறித்து சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.
மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட தகவல் இல்லாததால், குறிப்பிட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தவறான பதிலாகும். பொதுமக்களுக்கு வசதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அறிவிப்பு பலகையை அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். எனவே, அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலர்கள் குறித்த அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post மாநகர காவல் நிலையங்களில் ஆர்டிஐ அறிவிப்பு பலகை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் மனு appeared first on Dinakaran.
