திருமங்கலம், பிப். 14: மதுரை, வண்டியூரினை சேர்ந்தவர் பாண்டி(47). இவரது தந்தையின் நினைவு தினத்தினையொட்டி நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திதி கொடுப்பதற்காக நேற்று காலை குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார். திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இயற்கை உபாதைக்காக கார் நிறுத்தப்பட்டது.
அப்போது பின்னால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) என்பவர் ஓட்டி வந்த ஜீப் அவர்களது கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பாண்டி, அவரது மனைவி பூங்கொடி(42), சௌந்தரபாண்டி(70), வெண்ணிலா(60), காரை ஓட்டி வந்த கார்த்தி(33) ஆகியோரும், ஜீப்பில் வந்த ஈஸ்வரன், உடனிருந்த மற்றொருவர் என ஏழு பேர் படுகாயமடைந்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்தவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
The post கார் மீது ஜீப் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
