சாலை ஓரத்தில் கால்நடைகள் மேய்ச்சலால் வாகன ஓட்டிகள் அவதி

 

காங்கயம், பிப்.14: காங்கயம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் சாலை, பழையகோட்டை, கோவை சாலை, தாராபுரம் சாலை ஆகிய பிரதான சாலையில் அதிக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றது. காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள்,பள்ளிகள் வாகனங்கள் மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் வீடு திரும்பவும் இந்த சாலைகளை உபயோகித்து வருகின்றனர். இந்த சாலைகளில் அதிகமான கனரக வாகனங்களும் செல்கின்றது.இந்த சாலைகளின் ஓரத்தில் சிலர் கால்நடைகளை ஆபத்தறியாமல் மேய்வதற்கு அவிழ்த்து விடுகின்றனர்.

இதனால்‌ அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாகவும்,ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கால்நடைகளும் பேருந்து மற்றும் லாரி போன்ற வாகனச் சக்கரத்தில் சிக்கி இறக்கவும் நேரிடும் எனவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். நேற்று மதியம் சென்னிமலை சாலையில் லாரியின் நடுவே 2ஆடுகள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தன. இது போன்ற சம்பவங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை சாலையோரம் கால்நடைகள் மேய்வதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை ஓரத்தில் கால்நடைகள் மேய்ச்சலால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: