பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை நிறைவு

திருப்பூர், பிப்.13: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மார்ச் முதல் வாரத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுகளுக்கு முன்கூட்டியே செய்முறை தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் தேர்வு முடியும் நிலையில் நேற்று சத்துணவியல் துறைக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் தொடங்கி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 துவங்கி ஏப்.15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

The post பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: