சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தியது. குறிப்பாக முதல்வர் வசிக்கும் அரசு இல்லத்தை ஆடம்பர மாளிகையாக கெஜ்ரிவால் மாற்றியுள்ளார். கட்டிடத்தை புதுப்பிப்பதற்கு ரூ.75 முதல் ரூ.80 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய பின்னர் பாஜகவின் புதிய முதல்வரை அந்த கட்சி அறிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பாஜக முதல்வர் ஆடம்பர மாளிகையில் தங்க மாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் விரேந்திர சச்சதேவா டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The post கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் பாஜ முதல்வர் தங்க மாட்டார்: கட்சி வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.
