வேலூர் ஆப்காவில் சிறைத்துறை அதிகாரிகள் 9 மாதம் பயிற்சி நிறைவு 17 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது

வேலூர், பிப்.11: வேலூர் ஆப்காவில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு 9 மாதம் பயிற்சி நிறைவடைந்தது. இதில் 17 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. வேலூர் ஆப்காவில் 31வது பேட்ஜ் சிறைத்துறை அதிகாரிகள் பயிற்சி நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் அன்சர், மதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் பாஸ்கர் வரவேற்றார். ஊரீசு கல்லூரி முதல்வர் ஆனிகமலா ப்லோரன்ஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதில், கேரளாவைச் சேர்ந்த 17 சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 9 மாதங்களாக சிறைத்துறை பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் 17 பேருக்கும் நேற்று பட்டங்கள் வழங்கப்பட்டது. அனைத்து பயிற்சிகளிலும் சிறப்பாக மேற்கொண்ட அருண்கணேசனுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. முன்னதாக பயிற்சி முடித்த சிறை அலுவலர்கள் 9 மாதம் பயிற்சி நிறைவு எங்களுக்கு வாழ்வின் மைல்கல்லாக அமைந்துள்ளது. பேராசிரியர்கள் எங்கள் அறிவுக்கண் திறக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளித்தனர் என்று பேசினார். முடிவில் பேராசிரியர் பியூலா இமானுவேல் நன்றி கூறினார்.

The post வேலூர் ஆப்காவில் சிறைத்துறை அதிகாரிகள் 9 மாதம் பயிற்சி நிறைவு 17 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: