சிவகங்கை, பிப். 11: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை, அகவிலைப்படி நிலுவை, சரண் விடுப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை ழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர் மற்றும் சிறப்பு காலமுறை, தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், வினோத்ராஜா, சின்னப்பன், பயாஸ்அகமது, கிருஷ்ணகுமார், ராஜாமுகமது, ஜெயப்பிரகாஷ், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஜெசி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.
