ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் அத்தகைய நிலை இல்லாததால் தான் பாஜ ஆட்சியை பிடிக்க முடிகிறது. எதிர்கட்சிகளின் ஒற்றுமைதான் பாஜவை வீழ்த்தும், தோற்கடிக்கும். ஈரோட்டில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என எதிர்பார்த்தோம். அந்த வெற்றி கிடைத்துள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் பாராபட்சமாக நடந்து கொள்வதை பாஜ அரசு வழக்கமாக கொண்டுள்ளது.
இத்தகைய போக்கு இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தானது. பாஜ நண்பர்களுக்கு ஏற்ற நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். கவர்னர் ரவி தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தனது ஆர்எஸ்எஸ் கொள்கையை அமல்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட அனைத்து தீர்மானங்கள், சட்ட மொழிவுகளுக்கு உரிய அங்கீகாரத்தை அவர் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
* மத கலவர முயற்சி எச்.ராஜா மீது நடவடிக்கை தேவை
சண்முகம் கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ், பாஜ கும்பல் தமிழ்நாட்டை ஒரு மதகலவர பூமியாக ஆக்குவது என்ற திட்டத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முருகன் மீது பக்தி இல்லை. இவ்வளவு நாளாக ராமரை கூறினர். திடீரென தற்போது முருகனை கூறுகின்றனர். நாளை வேறு கடவுளை கூறுவார்கள்.
அவர்களை பொறுத்தவரை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது தான் அவர்களின் நோக்கம். தமிழக அரசு இதுபோன்று மதவெறியை கிளப்பும், தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்குவோம் என பேசிய எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
The post எதிர்கட்சிகளின் ஒற்றுமைதான் பாஜவை தோற்கடிக்கும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் அழைப்பு appeared first on Dinakaran.