புதுக்கோட்டை, பிப்.8: மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஹர்னீஸ் 70-75 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற மாணவனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நேரில் அழைத்து பாராட்டினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் வேலுசாமி உடற்கல்வி இயக்குநர் சண்முகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
The post மாநில குத்துச்சண்டை போட்டி அரசு பள்ளி மாணவர் சாதனை appeared first on Dinakaran.
