கடலூர் மாவட்டம் வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடைபெறுவதையொட்டி விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.