ஆலந்தூர்: ஆதம்பாக்கம், சாஸ்திரி நகர், பிரதான சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் மீரான் உசேன் (57). இவர் நேற்றுமுன்தினம் தனது கடையில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தர மறுத்த மீரான் உசேனை கீழே தள்ளி, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.700 பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து மீரான் உசேன் ஆதம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், மீரானிடம் பணத்தைப் பறித்து சென்றவர் ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேரந்த சூர்யா (22), என தெரிய வந்தது. இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரிதிர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்தது. அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.